நயன்தாராவின் நெற்றிக்கண் படமும் காப்பியா? போஸ்டரை வைத்தே கண்டுபிடித்த நெட்டிசன்ஸ்!

Webdunia
திங்கள், 26 அக்டோபர் 2020 (14:55 IST)
நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள நெற்றிக்கண் திரைப்படம் ஒரு ஸ்பானிஷ் திரைப்படத்தின் காப்பி என சொல்லப்படுகிறது.

நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் படங்களில் நெற்றிக்கண்ணும் ஒன்று. இந்த படத்தை அவரது வருங்கால கணவரான விக்னேஷ் சிவனின்  ரவுடி பிக்சர்ஸ் தயாரித்து வருகிறது. மிலிண்ட் ராவ் என்ற புதுமுக இயக்குனர் கதை, வசனம், எழுதி, இயக்க உள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்கி பெரும்பாலும் முடிந்து விட்டது. இந்த படத்துக்காக நெற்றிக்கண் என்ற தலைப்பை கொடுத்ததற்காக நயன்தாரா கவிதாலயா நிறுவனத்துக்கு நன்றி சொல்லி அறிக்கை வெளியிட்டு இருந்தார்.

இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் இந்த படத்தின் போஸ்டர் மற்றும் தலைப்பு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. இந்நிலையில் இந்த படத்தின் போஸ்டரை வைத்தே இந்த படம் ஜூலியாஸ் அய்ஸ் (juliya’s eyes) என்ற படத்தின் தழுவல் என்று கண்டுபிடித்துள்ளனர். அந்த படத்தில் கண் பார்வை குறைபாடு உடைய பெண்ணை துரத்தும் கொலைகாரனிடம் இருந்து அவர் எப்படி தப்பிக்கிறார் என்பதே கதை. அதைதான் நயன்தாரவை வைத்து எடுத்து வருவதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்