'நம்ம வீட்டு பிள்ளை' படத்தின் புத்தம் புதிய அப்டேட்!

Webdunia
திங்கள், 26 ஆகஸ்ட் 2019 (19:12 IST)
நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து வரும் திரைப்படங்களில் ஒன்றான 'நம்ம வீட்டு பிள்ளை' திரைப்படம் வரும் செப்டம்பர் மாதம் வெளியாகவிருப்பதால் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் முதல் சிங்கிள் பாடலான 'எங்க அண்ணன்' பாடல் 'பாசமலர்' ரேஞ்சுக்கு புகழ் பெற்ற நிலையில் தற்போது இந்த படத்தின் அடுத்த பாடல் ரிலீஸ் குறித்த தகவல் வெளிவந்துள்ளது
 
இந்தப் படத்தின் 2வது சிங்கிள் பாடலான ரொமான்ஸ் மெலடி பாடல் ஆகஸ்ட் 28ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் அறிவித்துள்ளது. மெலடி கிங் என்று பெயரெடுத்த டி.இமான் கம்போஸ் செய்த இந்த பாடல் 'மைலாஞ்சி' என்று தொடங்குகிறது என்பதும் இந்த பாடலை எழுதியவர் மற்றும் பாடியவர்கள் குறித்த விபரங்கள் நாளை வெளிவரவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் வளர்ந்து வரும் 'நம்ம வீட்டு பிள்ளை' படத்தில் சிவகார்த்திகேயன், அனு இமானுவேல், ஐஸ்வர்யா ராஜேஷ், பாரதிராஜா, சமுத்திரக்கனி, நட்டி நட்ராஜ், அர்ச்சனா, யோகி பாபு, சூரி, ஆர்கே சுரேஷ், ஆடுகளம் நரேன், ரமா உள்பட பலர் நடித்துள்ளனர். நீரவ் ஷா ஒளிப்பதிவில், ரூபன் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகி வருகிறது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்