பிக் பாஸ் பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவரும், அஜித், விஜய் உள்பட பல நடிகர்களுடன் நடித்த பிரபல நடிகையுமான நடிகை நமீதாவை நெக்டிசன் ஒருவர் மிரட்டி உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதைவிட மிரட்டி அந்த நெட்டிசனுக்கு பதிலடி கொடுத்துள்ள நமிதாவின் பதிவும் தற்போது வைரலாகி வருகிறது
நமீதாவின் ஆபாச படங்கள் இணையதளங்களில் இருப்பதாகவும், அந்த பதிவுகளை இணையதளத்தில் வெளியிட்டு நமீதாவை அசிங்கப்படுத்துவேன் என்றும் நெட்டிசன் ஒருவர் மிரட்டியுள்ளார். இந்த மிரட்டலுக்கு பயப்படாத நமீதா ’முடிந்தால் அதனை பதிவு செய்துகொள்’ என்று கூறியுள்ளார். மேலும் இது போன்ற பெண்களை மதிக்கத் தெரியாதவர்கள் உயிருடன் இருக்கவே லாயிக்கில்லை என்றும் இவர்களுக்கு கடுமையான தண்டனை கொடுக்கவேண்டும் என்றும் இவர்கள் எல்லாம் எப்படி தாயை மதிப்பார்கள் என்று கூறியுள்ளார்
மகளிர் தினம் கொண்டாடப்படுவது விட பெண்களை மதிப்பது தான் பெரிய விஷயம் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் தன்னை மிரட்டிய நபர் இவர்தான் என்றும் அந்த நெட்டிசனின் புகைப்படத்தையும் தனது இன்ஸ்டாகிராமில் நமீதா பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது