ஓடிடியில் கலக்கும் நானி &நஸ்ரியாவின் ‘அடடே சுந்தரா’… படக்குழு வெளியிட்ட ஸ்பெஷல் அப்டேட்!

Webdunia
வியாழன், 14 ஜூலை 2022 (09:33 IST)
நஸ்ரியா பல வருட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் சினிமாவில் நடிக்க தொடங்கியுள்ளார்.

தெலுங்கில் முன்னணி நடிகராக உள்ள நானி தற்போது Ante Sundaraniki என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நஸ்ரியா நடித்துள்ளார். இப்படம் தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் டப் செய்யப்பட்டுள்ளது. 

இந்நிலையில், தமிழில் அடடே சுந்தரா என பெயரிடப்பட்டு இந்த படம் ஜூன் 10 ஆம் தேதி ரிலீஸானது. படம் வெளியாகி நல்ல வரவேற்புகளைப் பெற்றுள்ளது. இந்நிலையில் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் ஜூலை 10 ஆம் தேதி இந்த திரைப்படம் ஸ்ட்ரீம் ஆகி வருகிறது.

பீல்குட் திரைப்படமான ‘அடடே சுந்தரா’ திரையரங்கை விட ஓடிடியில் அதிக கவனத்தைப் பெற்றுள்ளது. இதையடுத்து நெட்பிளிக்ஸ் தளத்தில் ட்ரண்ட்டிங்கில் நம்பர் 1 இடத்தில் உள்ளது. இது சம்மந்தமான அறிவிப்பை படத்தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் வெளியிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்