’நாய் சேகருக்கு பதிலாக வடிவேலு செலக்ட் செய்த டைட்டில்!

Webdunia
புதன், 15 செப்டம்பர் 2021 (20:16 IST)
லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் வடிவேலு நடிப்பில் சுராஜ் இயக்கத்தில் உருவாக இருக்கும் நாய் சேகர் என்ற திரைப்படத்தின் ஆரம்ப கட்ட பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்திற்கு நாய் சேகர் என்ற டைட்டிலில் சிக்கல் ஏற்பட்டது என்பதும் இந்த டைட்டிலை பதிவு செய்து வைத்திருக்கும் ஏஜிஎஸ் நிறுவனம் இந்த டைட்டிலை தர மறுப்பதாகவும் செய்திகள் வெளியானது.
 
இந்த நிலையில் வடிவேலு தரப்பிலிருந்து பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு ஏற்படாததை அடுத்து தற்போது வடிவேலு புதிய முடிவு ஒன்றை எடுத்துள்ளார். அதன்படி இந்த படத்திற்கு நாய் சேகர் ரிட்டன்ஸ் என்ற டைட்டில் வைக்க போவதாக படக்குழுவினர்களிடம் இருந்து தகவல்கள் கசிந்துள்ளது. 
 
இந்த படத்தின் கதைக்கு கண்டிப்பாக நாய் சேகர் என்ற டைட்டில் தேவைப்படுவதால் நாய் சேகர் ரிட்டன்ஸ் என்ற டைட்டிலை தேர்வு செய்திருப்பதாக படக்குழுவினர்களிடம் இருந்து தகவல்கள் வெளிவந்துள்ளது. மேலும் விரைவில் டைட்டிலுடன் கூடிய வசூல் போஸ்டர் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்