விஜய் படத்தை இயக்கும் மிஸ்கின்?

Webdunia
வெள்ளி, 26 மே 2023 (18:23 IST)
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய். இவர் வம்சி இயக்கத்தில் நடித்த வாரிசு படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து, இவர் தற்போது, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

இப்படத்தில், சஞ்சய்தத், மிஸ்கின், அர்ஜூன், மன்சூர் அலிகான், மிஸ்கின்  உள்ளிட்ட நடிகர்கள் நடித்து வருகின்றனர். இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பான நடைபெற்று வரும்  நிலையில், இப்படம் வரும் தீபாவளிக்கு ரிலீஸாகவுள்ளது.

இப்படத்திற்குப் பின் வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய்68 படத்தில்   விஜய் நடிக்கவுள்ளார்.இப்படத்தை ஏஜிஎஸ்  நிறுவனம் தயாரிக்கவுள்ளது.

இந்த நிலையில், இயக்குனர் மிஸ்கின்  நடிகர் விஜய்யை வைத்து ஒரு பான் இந்தியா படத்தை இயக்க திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர்  கூறியுள்ளதாவது:

‘’நான் விஜய்யிடம் எப்போது அப்பாயிண்மென்ட் கேட்டாலும்  உடனே தருவார். நான் கூறும் கதையை கேட்க அவர் தயாராக இருக்கிறார்.   நான் அவரிடம் சொல்லும் கதை சிறப்பானதாகவும், அவர் ரசிகர்களுக்கும் பிடித்தமானதாகவும் இருக்க வேண்டும் என்பதற்காக, தற்போது ஒரு கதையை தயார் செய்து வருகிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்