எம்.ஜி.ஆர்.மகன் பாடல் ரிலீஸ் தேதி அறிவிப்பு

Webdunia
வெள்ளி, 26 மார்ச் 2021 (17:41 IST)
சசிக்குமார் நடிப்பில் பொன்ராம் இயக்கத்தில் உருவாகியுள்ள ’எம்ஜிஆர் மகன்’. இப்படத்தின் முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது.

மேலும் இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என்பதையும் படக்குழுவினர் உறுதி செய்துள்ளனர். சசிகுமார், மிருணாளினி, சத்யராஜ் சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு அந்தோணிதாசன் இசையமைத்துள்ளார். ஸ்கிரீன் சீன் நிறுவனம் தயாரித்துள்ள இந்த திரைப்படம் சசிகுமார் மற்றும் பொன்ராம் ஆகியோர் காம்பினேசன் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அந்தோணிதாசன் இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல்கள் வரும் மார்ச் 27 ஆம் தேதி வெளியாகவுள்ளதாகத் தகவல்கள் வெளியான நிலையில், இன்று இப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் இதை உறுதி செய்துள்ளது.

நீண்ட நாட்களாக சசிக்குமாரின் படத்தை தியேட்டரில் பார்க்க ஆர்வமுடன் உள்ள அவரது ரசிகர்களுக்கு இப்படம் ஏப்ரம் மாதத்தில் ரிலீசாகவுள்ளது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்