பிரபல மாடலான மீரா மிதுன் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் புகழ்பெற்றவர். தொடர்ந்து படங்கள் சிலவற்றில் நடித்து வரும் மீரா மிதுன் அண்மை காலமாக பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகிறார், அந்த வகையில் சமீபத்தில் சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டிருந்த மீரா மிதுன் அதில் தாழ்த்தப்பட்ட சமூகம் ஒன்றை கேவலமாக பேசியிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் இதுகுறித்து பேசிய மீரா மிதுன் “தாராளமாக என்னை கைது செய்யுங்கள்... ஏன் காந்தி , நேரு எல்லாம் சிறைக்கு போகவில்லையா?” என்று பேசியுள்ளார். மீராமிதுன் நேரில் ஆஜராக பட்சத்தில் அவர் கைது செய்யப்பட வாய்ப்பிருப்பதாக பேசிக் கொள்ளப்படுகிறது.