தளபதி விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படம் வெளியாகி இன்றுடன் 50வது நாட்கள் ஆனதை அடுத்து விஜய் ரசிகர்களும் மாஸ்டர் படக்குழுவினரும் இந்த வெற்றியை கொண்டாடி வருகின்றனர்
லாக்டவுனுக்கு பின்னர் திரையரங்குகள் திறக்கப்பட்ட பின் 50 நாட்கள் திரையரங்குகளில் ஓடும் முதல் படம் மாஸ்டர் திரைப்படம் தான் என்பது கோலிவுட் திரை உலகிற்கே ஒரு பெருமையான ஒன்றாக கருதப்படுகிறது
இந்த நிலையில் சற்று முன்னர் லோகேஷ் கனகராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் மாஸ்டர் படத்தின் மேக்கிங் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் விஜய் மற்றும் விஜய் சேதுபதியின் காட்சிகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது
இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது. ஏற்கனவே மாஸ்டர் படத்தின் 50வது நாள் குறித்த ஹேஷ்டேக் ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.