மீண்டும் இணையும் ரஜினி - மம்முட்டி.... இரண்டாம் பாகத்தின் பவர்

Webdunia
வெள்ளி, 19 மே 2017 (20:07 IST)
மணிரத்னம் மீண்டும் ரஜினி, மம்முட்டியை வைத்து படம் இயக்கபோவதாக தவல்கள் வெளியாகியுள்ளது. அது தளபதி 2 ஆக இருக்கலாம் என கூறப்படுகிறது.


 

 
1991 ஆம் ஆண்டு ரஜினி மம்முட்டி இணைந்து நடித்த படம் தளபதி. இதை மணிரத்னம் இயக்கினார். இன்று வரை நட்புக்கும் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்க கூடிய திரைபடங்களில் இதுவும் ஒன்று. மணிரத்னத்தின் மிகப்பெரிய வெற்றிப் படங்கள் வரிசையில் இதுவும் ஒன்று.
 
இந்நிலையில் ரஜினி, மம்முட்டி ஆகியோரை வைத்து மீண்டும் மணிரத்னம் படம் இயக்க போவதாக கோலிவுட் வட்டாரங்களில் பேசப்படுகிறது. அப்படி ஒரு படம் உருவானால் அது தளபதி 2 ஆக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. மேலும் படத்திற்கான ஸ்கிர்ப்ட் தயார் நிலையில் உள்ளதாம்.
அடுத்த கட்டுரையில்