என் மீம்களை பார்த்து சிரித்தேன்…. மாளவிகா மோகனன் பதில்!

Webdunia
புதன், 3 பிப்ரவரி 2021 (15:56 IST)
மாஸ்டர் படத்தில் நடித்த மாளவிகா மோகனின் பாவனைகளை கலாய்க்கும் விதமாக வெளியான மீம்ஸ்களை பார்த்து சிரித்ததாக அவரே தெரிவித்துள்ளார்.

மாஸ்டர் படத்தில் கமிட்டானதில் இருந்து மாளவிகா மோகனன் மீதான எதிர்பார்ப்பு அதிகமானது. அதற்கு முன்னர் அவர் தமிழில் பேட்ட படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் மட்டுமே நடித்திருந்தார். இந்நிலையில் மாஸ்டர் வெளியான போது அவருக்கான காட்சிகளே படத்தில் இல்லாமல் போனது பெருத்த ஏமாற்றமாக இருந்தது.


அப்படி இருந்த காட்சிகளிலும் அவருக்கென்று பெரிதாக நடிப்பதற்கு பெரிதாக எந்த வாய்ப்புகளும் இல்லை. இந்நிலையில் இடைவேளைக்கு முன்பாக அவர் விஜய்யிடம் கோபமாக பேசும் காட்சி பலராலும் கேலி செய்யப்பட்டது. இப்போது அதை வைத்து மீம்ஸ்களும் வந்தவண்ணம் உள்ளன. இந்நிலையில் அந்த மீம்ஸ்களை தான் பார்த்ததாகவும் அதைப் பார்த்த போது சிரிப்பு வந்தது எனவும் மாளவிகா தெரிவித்துள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்