மாஸ்டர் படத்தில் நடித்த மாளவிகா மோகனின் ரியாக்ஷன் ஒன்று மீம் மெட்டீரியலாகி உள்ள நிலையில் அதை அவரே ஷேர் செய்துள்ளார்.
நடிகர் விஜய் நடித்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான படம் மாஸ்டர். இதில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்திருந்தார். இந்நிலையில் அந்த படத்தின் ஒரு காட்சியில் விஜய்யிடம் மாளவிகா மோகனன் கோபமாக பேசும் காட்சி ஒன்று இடம்பெற்றிருந்தது.
மாளவிகா மோகனனின் அந்த ரியாக்ஷன் சமீப காலமாக சமூக வலைதளங்களில் வைரலாக, அந்த காட்சியை மாளவிகா பல் துலக்குவது போல, பீட் பாட்டில் , பால் பாக்கெட் கடித்து திறப்பது போல, சிக்கன் சாப்பிடுவது போல என விதவிதமாக நெட்டிசன்கள் தயார் செய்து சமூக வலைதளங்களில் பகிர அது வைரலானது.
அவற்றை தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ள மாளவிகா மோகனன் “நான் கொஞ்சம் தாமதமாகதான் இந்த மீம்களை பார்த்தேன். ஆனால் விழுந்து விழுந்து சிரித்தேன். முக்கியமாக அந்த பல் விளக்கும் மீம். உங்களை பார்த்து நீங்களே சிரிக்கா விட்டால் வாழ்க்கை போரடித்துவிடும்” என்று கூறியுள்ளார்.
Im a little late to my own meme-fest, but this is hilarious guys