எங்கு சென்றாலும் அந்த ஒருபடம்தான் என் விசிட்டிங் கார்ட் – மாதவன் நெகிழ்ச்சி!

Webdunia
புதன், 30 டிசம்பர் 2020 (10:37 IST)
நடிகர் மாதவன் 3 இடியட்ஸ் படத்தின் 11 ஆவது ஆண்டு நிறைவை ஒட்டி அது சம்மந்தமான மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

தமிழ் சினிமாவில் அலைபாயுதே திரைப்படம் மூலமாக அறிமுகமான மாதவன், சாக்லேட் பாயாக வலம் வந்தார். ஆனால் அதே நேரத்தில் தெலுங்கு மற்றும் இந்தி திரைப்படங்களிலும் அவர் நடித்து வந்தார். அந்த வகையில் 2009 ஆம் ஆண்டு வெளிவந்த  இடியட்ஸ் திரைப்படத்தில் அமீர்கானோடு குரேஷி என்ற கதாபாத்திரத்தில் நடித்தார். அந்த திரைப்படம் அப்போது பாலிவுட்டின் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது. அதையடுத்து பல மொழிகளில் அந்த திரைப்படம் ரீமேக் செய்யப்பட்டது.

இந்நிலையில் இந்த படம் வெளியாகி 11 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இதுகுறித்து பேசியுள்ள மாதவன் ‘நான் எங்கு சென்றாலும் எனது விசிட்டிங் கார்டாக அமைந்தது 3 இடியட்ஸ் படம்தான். இளைஞர்களின் உலகத்தில் அப்படம் ஏற்படுத்திய தாக்கம் மிகப்பெரிய அளவிலானது. இந்தி தெரியாத ரசிகர்கள் கூட அந்த படத்தின் மூலம் என்னை மிகவும் நேசித்தார்கள். அந்த படத்தின் ஃபர்ஹான் குரேஷி தனது தந்தையிடம் நிகழ்த்தும் உரையாடலைப் போல எல்லா இளைஞர்களும் தங்கள் தந்தையிடம் உரையாடலை நிகழ்த்தியிருப்பார்கள் என நினைக்கிறேன்’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்