ஒரு வழியாக மாநாடு படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்தது படக்குழு!

Webdunia
செவ்வாய், 31 டிசம்பர் 2019 (19:35 IST)
வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள "மாநாடு" திரைப்படம் பல்வேறு பிரச்சனைகளை தொடர்ந்து சந்தித்து வந்தது. குறித்த நேரத்தில் படப்பிடிப்பில் நடிகர் சிம்பு பங்கேற்காததால் இப்படம் வெளியாகுமா ஆகாத?  என்ற சந்தேகத்தில் இருந்து வந்தது. இதனால் சிம்புவின் ரசிகர்கள் மிகுந்த வருத்தத்துடன் இருந்தனர். 
 
சுரேஷ் காமாட்சி தயாரிக்கும் இப்படத்தில் கல்யாணி ப்ரியதர்ஷன் ஹீரோயினாக நடித்துள்ளார். அரசியல் கலந்த கமர்ஷியல் படமாக உருவாகி வரும் இப்படத்தின்  படப்பிடிப்பு குறித்தும் எந்தெந்த நடிகர்கள் பணிபுரியவுள்ளனர் என்ற தகவல்கள் பொங்கல் தினத்தன்று வெளியாகும் என்று தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி ட்விட்டரில் தெரிவித்துள்ளார். 
 
பல நாட்களாக கிடப்பில் போடப்பட்டிருந்த இப்படத்தை குறித்து முதல் முறையாக ஒரு நல்ல செய்து படக்குழுவினரிடமிருந்து கிடைத்துள்ளதால்  STR ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் இருந்து வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்