சிம்பு நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் மாநாடு. இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தில் உள்ள நிலையில் இந்த படத்தின் டீஸர் நாளை மதியம் 02.34 மணிக்கு வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டது
நாளை சிம்புவின் பிறந்த நாளை அடுத்து அவரது ரசிகர்களுக்கு கிடைக்கும் பிறந்தநாள் பரிசாக இந்த டீசர் கருதப்படுகிறது. இந்த நிலையில் மாநாடு படத்தின் இந்தி டீசரை பாலிவுட் இயக்குனர் மற்றும் நடிகர் அனுராக் காஷ்யப் வெளியிடவுள்ளதாக வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம்
இதனை அடுத்து தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி மாநாடு படத்தின் மலையாள டீசரை பிரபல மலையாள நடிகர் மற்றும் இயக்குனர் பிரதிவிராஜ் வெளியிடவுள்ளார். அதேபோல் மாநாடு படத்தின் கன்னட டீசரை பிரபல கன்னட நடிகர் கிச்சா சுதீப் வெளியிடவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
அதேபோல் மாநாடு படத்தின் தமிழ் டீசரை சிம்புவே தனது டுவிட்டரில் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ் தெலுங்கு கன்னடம் இந்தி மலையாளம் ஆகிய 5 மொழிகளில் மாநாடு படத்தின் டீசர் நாளை மதியம் சரியாக 02.34 மணிக்கு வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது