சிம்புவுடன் இணையும் முன்னணி இயக்குனர் - மாநாடுக்குப் பின் வரிசை கட்டும் இயக்குனர்கள் !

Webdunia
திங்கள், 2 மார்ச் 2020 (15:40 IST)
சிம்பு மாநாடு படம் முடிந்த பின்னர் இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

நடிகர் சிம்பு நடிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில் 'மாநாடு' திரைப்படம் உருவாக்க திட்டமிடப்பட்டது. ஆனால் வழக்கம்போல் படக்குழுவினர்களுக்கு ஒத்துழைப்பு தர சிம்பு அடம்பிடித்ததால் இந்த படம் கிட்டத்தட்ட டிராப் ஆனதாக செய்திகள் வெளிவந்தது.

இதனால் சிம்பு ரசிகர்கள் மிகுந்த மன வருத்தத்தில் இருந்து வந்தனர். இதையடுத்து சிம்புவின் தாயார் கொடுத்த உறுதி மொழியை ஏற்று 'மாநாடு' படத்தை மீண்டும் தொடங்க தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி முடிவு செய்தார். பின்னர் படப்பிடிப்பிற்கான வேலைகள் மும்முரமாக துவங்கிய நிலையில் சில நாட்களுக்கு முன்னர் பூஜையுடன் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கியது. 

மாநாட்டுக்குப் பின்னர் வரிசையாக படங்களில் நடிக்க சிம்பு முடிவெடுத்துள்ளார். இதனால் அடுத்த படத்துக்காக முன்னணி இயக்குனர்களிடம் கதை கேட்டு வருகிறார். சேரன் இயக்கத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து ஒரு படத்தில் நடிக்க இருப்பதாக சொல்லப்பட்டது. இந்நிலையில் இப்போது மிஷ்கின் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதில் முதலில் எந்த படத்தில் அவர் நடிப்பார் என்பது குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. இயக்குனர் மிஷ்கின் தான் இயக்கி வந்த துப்பறிவாளன் 2 படத்தில் சமீபத்தில் விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்