சமீபத்தில், ராஜமெளலி இயக்கத்தில், ஜூனியர் என்.டி.ஆர்- ராம்சரண் நடிப்பில் வெளியான படம் ஆர்.ஆர்.ஆர். இப்படம் பெரும் எதிர்பார்ப்புகளிடையே வெளியே சூப்பர் ஹிட் ஆகியுள்ளது. இதுவரை ரூ.1000 கோடிக்கு மேல் உலகம் முழுவதும் வசூலித்துள்ளது.
இப்படத்தை அடுத்து ராஜமெளலி சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபு நடிக்கும் புதிய படத்தை இயக்கவுள்ளார்.
அதேபோல், ஜூனியர் என்.டி.ஆர் பிரபல இயக்கு நர் கொரட்டலா சிவா இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். இப்படம் பிரமாண்டமாக உருவாகவுள்ள நிலையில், இப்படத்தின் ஜூனியர் என்.டி.ஆருக்கு ஜோடியாக நடிக்க ஆலியா பட் ஒப்பந்தமான நிலையில், அவரது கால்ஷூட் பிரச்சனையால் நடிக்கவில்லை.
எனவே இப்படத்தில் நடிக்க ராஷ்மிகா மந்தனா மற்றும் பூஜா ஹெக்டே இடையே போட்டி உருவாகியுள்ளதாக சிவா தெரிவித்துள்ளார். இப்படத்தின் ராஷ்மிகா நடிக்க அதிக வாய்புள்ளதாக கூறப்படுகிறது.