மக்கள் சூப்பர் ஸ்டார் என்று எனக்குத் தெரியாமலேயே படத்தில் போட்டுவிட்டார்கள். எனக்கு அந்தப் பட்டம் வேண்டாம் என ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.
நெற்று வெளியான மொட்ட சிவா கெட்ட சிவா படத்தில் லாரன்ஸ் பெயருக்கு முன்னால் மக்கள் சூப்பர் ஸ்டார் என்ற பட்டப் பெயர் சேர்க்கப்பட்டிருந்தது.
இதைப் பார்த்த ரசிகர்கள் மற்றும் பொது மக்களுக்கு லாரன்ஸ் மீது வெறுப்பு வந்தது. இந்த வெறுப்பை சமூக வலைத் தளங்களில் லாரன்ஸை கடுமையாக விமர்சித்து பதிவுகள் போட்டு காட்டி வருகின்றனர்.
இந்த எதிர்ப்பை சற்றும் எதிர்பாராத லாரன்ஸ், உடனடியாக இது எனக்குத் தெரியாமல் நடந்துவிட்டது என் கூறி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் பின்வருமாரு தெரிவித்துள்ளார்:
நேற்று வெளியான மொட்ட சிவா கெட்ட சிவா படம் மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்று வெற்றி கரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
இந்த படத்தின் இயக்குநர் சாய்ரமணி சமீப காலமாகவே எனக்கு ஒரு இன்ப அதிர்ச்சி கொடுக்க போவதாக சொல்லி கொண்டிருந்தார். அது என்ன என்பது எனக்குத் தெரியாது. ஆனால் இந்த மொட்ட சிவா கெட்ட சிவா படத்தில் என் பெயருக்கு முன்னாள் 'மக்கள் சூப்பர் ஸ்டார்' என்ற பட்டதை வழங்கி இருக்கிறார். அதுதான் அந்த இன்ப அதிர்ச்சி என இப்பொழுது தான் தெரிந்தது. அவர் அன்பிற்கு நன்றி.
ஆனாலும், எனக்கு எந்த ஒரு பட்டமும் வேண்டாம். எப்போதும் இந்த உலகத்தில் ஒரே ஒரு சூப்பர் ஸ்டார், அது என் தலைவர் ரஜினிகாந்த் மட்டும்தான். அவர்தான் என் குரு, எனக்கு வழிகாட்டி எல்லாமே. அவரால்தான் நான் இந்த சினிமா உலகுக்கே வந்தேன். அவர்தான் என்னை சினிமாவில் சேர்த்துவிட்டார்.
எனக்கு இந்த உலகத்திலேயே மிகப்பெரிய பட்டம் என் அம்மாவின் பெயர் தான். அதற்கு நிகராக வேறு எந்த பட்டமும் என்னை திருப்திப்படுத்திவிட முடியாது. அதனால் கண்மணி என்ற என் அம்மாவின் பெயரை எனக்கு பட்டமாக நானே தேர்ந்தெடுத்துக் கொண்டேன். அதனால் இனி என் பெயருக்கு முன்னாள் பட்டமாக கண்மணி ராகவா லாரன்ஸ் என்று வைத்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அந்த அறிக்கையில் லாரன்ஸ் குறிப்பிட்டிருந்தார்.