கர்ணன் படத்தில் நான் ஏன் அதை செய்யவில்லை… நடிகர் லால் விளக்கம்!

Webdunia
திங்கள், 17 மே 2021 (16:12 IST)
கர்ணன் படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய நடிகர் லால் தனது கதாபாத்திரத்துக்காக டப்பிங் பேசவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.

மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் கர்ணன். கலைப்புலி எஸ் தாணு தயாரித்துள்ள இந்த படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் ஏப்ரல் 9 ஆம் தேதி காலை படம் வெளியானது. திரையரங்கில் மாஸ்டருக்கு பிறகு மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படமாக அமைந்தது. இந்நிலையில் மே 14 ஆம் தேதி அமேசான் ப்ரைமிலும் வெளியானது.

இந்த படத்தில் தனுஷுக்கு பிறகு அதிகம் கவர்ந்த கதாபாத்திரமாக மலையாள நடிகரானலால் நடித்து இருந்தார். நன்றாக தமிழ் பேச தெரிந்தாலும் லால்  இந்த படத்துக்காக டப்பிங் பேசவில்லையாம். அதற்கான காரணம் படத்தில் பேசப்படும் திருநெல்வேலி வட்டார வழக்குதானாம். இதை அவரே தனது சமூகவலைதளத்தில் வெளிப்படுத்தியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்