சீரியல் உலகில் கால்பதித்த லைலா? எந்த சேனலில் தெரியுமா?

Webdunia
புதன், 18 நவம்பர் 2020 (11:24 IST)
நடிகை லைலா ஜி தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் கோகுலத்தில் சீதை என்ற புத்தம் புதிய சீரியலில் நடிக்க உள்ளார்.

2000 ஆம் ஆண்டுகளின் தொடக்கத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் லைலா. சிரிப்பழகி லைலா  அந்த காலத்தில் அஜித், சூர்யா, விக்ரம், பிரசன்னா உள்ளிட்ட பலருடன் நடித்திருந்தார். அவர் நடிப்பில், தீனா, தூள், நந்தா, உன்னை நினைத்து, கண்ட நாள் முதல் என பல படங்கள் ஹிட்டாகின. கடைசியாக அஜித்துக்கு ஜோடியாக  2006ம் ஆண்டு பரமசிவம் படத்தில் நடித்தார். அதன்பின்னர் திருமணம் ஆகி கணவருடன் செட்டில் ஆகிவிட்டார்.

அதன் பின்னர் நடிப்புக்கு முழுக்கு போட்ட தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மட்டும் அவ்வப்போது பங்கேற்று வந்தார். இந்நிலையில் தனது உடல் எடையைக் குறைத்து தற்போதைய கதாநாயகிகளுக்கு சவால் விடும் விதமாக ஒல்லியாகி தனது லேட்டஸ்ட் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் மீண்டும் சினிமாவில் கலக்குவார் என எதிர்பார்க்கப்பட்ட லைலா இப்போது கதாநாயகிகள் வழக்கமாக சீரியலில் நடிப்பது போல தானும் நடிக்க முடிவு செய்துள்ளார். ஜி தமிழ் தொலைக்காட்சியில் புதிதாக ஒளிபரப்பாக உள்ள கோகுலத்தில் சீதை எனும் சீரியலில் அவர் நடிக்கவுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்