‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ வெற்றி… உதயநிதிக்கு பரிசளித்த தயாரிப்பாளர் லலித்!

Webdunia
செவ்வாய், 28 ஜூன் 2022 (11:12 IST)
நயன்தாரா, சமந்தா மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படம் ஏப்ரல் 28 ஆம் தேதி ரிலீஸ் ஆனது.

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடித்துள்ள முக்கோண காதல் கதை “காத்து வாக்குல ரெண்டு காதல்”. இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி ட்ரெண்டாகியுள்ளது. இந்த படம் ஏப்ரல் 28 ஆம் தேதி வெளியானது. தமிழில் இந்த படத்தை உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டார். விமர்சன ரீதியாக இந்த படம் பாராட்டுகளைப் பெறவில்லை என்றாலும், வசூலில் சோடை போகவில்லை.

இந்த படம் ஒட்டுமொத்தமாக திரையரங்குகள் மூலமாக 66 கோடி ரூபாய் வசூல்  செய்துள்ளதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வ தகவலை வெளியிட்டனர். இந்நிலையில் படத்தின் வெற்றியை அடுத்து தற்போது தயாரிப்பாளர் லலித் குமார், விநியோகஸ்தர் உதயநிதி ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து நினைவுப்பரிசு ஒன்றை வழங்கியுள்ளார். உதயநிதியின் ஓவியம் ஒன்றை அவர் வரைந்து கொடுத்துள்ளார். இது சம்மந்தமான போஸ்டர் இணையத்தில் வைரலாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்