'கொம்பு வச்ச சிங்கம்' டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு

Webdunia
திங்கள், 1 ஜூலை 2019 (20:47 IST)
நடிகரும் இயக்குனருமான சசிகுமார் நடித்த படங்கள் தொடர்ந்து தோல்வி அடைந்து வருகிறது. அசுரவதம், கொடிவீரன், பலே வெள்ளைத்தேவா, கிடாரி, தாரை தப்பட்டை' என தொடர்ந்து தோல்வி படங்கள் கொடுத்த சசிகுமார், ஒரே ஒரு வெற்றிப்படம் கொடுத்து மீண்டும் களத்தில் இருப்பதை உறுதி செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.
 
இந்த நிலையில் அவர் மிகவும் நம்பி இருப்பது 'கொம்பு வச்ச சிங்கம்' படத்தைத்தான். வழக்கம்போல் கிராமம், நண்பர்கள் சூழ்ந்த இந்த கதையில் 'சுப்பிரமணியபுரம்' சசிகுமாரை பார்க்கலாம் என்று படக்குழுவினர் ஏற்கனவே தெரிவித்திருந்தனர்.
 
இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்து தற்போது போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் நடந்து வரும் நிலையில் இந்த படத்தின் டீசர் வரும் 3ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
 'சுந்தரபாண்டியன்,' இது கதிர்வேலன் காதல்', 'சத்ரியன்' போன்ற படங்களை இயக்கிய எஸ்.ஆர்.பிரபாகரன்  இயக்கியுள்ள இந்த படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக முதல்முறையாக மடோனா செபாஸ்டியன் நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் மீண்டும் சசிகுமாருடன் சூரி  நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது ஏகாம்பரம் ஒளிப்பதிவில், டான் போஸ்கோ படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை ரேதான் சினிமாஸ் நிறுவனம் தயாரித்துள்ளது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்