கவர்ச்சியில் களமிறங்கிய கீர்த்தி சுரேஷ்

Webdunia
திங்கள், 31 ஜூலை 2017 (14:13 IST)
கீர்த்தி சுரேஷ் தன்னுடைய தெலுங்கு மார்க்கெட்டை தக்க வைத்துக்கொள்ள கவர்ச்சியாக நடிக்க முடிவு செய்துள்ளாராம்.


 

 
இது என்ன மாயம் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான கீர்த்தி சுரேஷ் ரஜினி முருகன் படம் மூலம் பிரபலமானார். அதைத்தொடர்ந்து அவர் நடித்த ரெமோ வெற்றிப்பெற தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக மாறிவிட்டார். அதன் பின் அவர் நடிப்பில் வெளியான இரண்டு படங்கள் தோல்வியடைய தெலுங்கு பக்கம் சென்றுவிட்டார்.
 
அங்கு அவர் நடித்த இரண்டு படங்களும் நல்ல வரவேற்பை பெற்றது. இருந்தாலுக் தெலுங்கில் உள்ள முன்னணி நடிகைகள் நடிப்புடன் சேர்த்து கவர்ச்சியையும் கொடுப்பதால் இவருக்கான மார்க்கெட் சற்று குறைவுதான். தற்போது இவரிடம் தெலுங்கு மற்றும் தமிழ் சினிமாக்களில் தலா ஒரு படம் கைவசம் உள்ள நிலையில் கவர்ச்சியில் இறங்கியுள்ளார்.
 
தெலுங்கு சினிமாவில் இனி கவர்ச்சியாக நடிக்கப்போவதாக தெரிவித்துள்ளார். இது தெலுங்கு ரசிகர்களுக்கு மட்டும்தான் தமிழ் ரசிகர்களுக்கு இல்லை.
அடுத்த கட்டுரையில்