அஜித்துடன் நடித்தே தீருவேன்: கீர்த்தி சுரேஷ்!!

Webdunia
புதன், 19 ஏப்ரல் 2017 (16:54 IST)
நடிகை கீர்த்தி சுரேஷ் விரைவில் நடிகர் அஜித்துடன் இணைந்து படத்தில் நடிப்பேன் என தெரிவித்துள்ளார்.


 
 
இது என்ன மாயம் படத்தில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக நடித்த கீர்த்தி சுரேஷ், ரஜினி முருகன் படத்தின் வெற்றிக்கு பின்னர் விஜய், தனுஷ் ஆகிய முன்னணி நடிகர்களுடன் நடித்துவிட்டார்.
 
திரையுலகில் குறுகிய காலத்தில் பெரும் வளர்ச்சி பெற்ற நடிகையாக கீர்த்தி சுரேஷ் உள்ளார். தற்போது சூர்யாவுடன் தானாக சேர்ந்த கூட்டம் என்ற படத்தில் நடித்து வருகிறார். அடுத்து விஷாலுடன் சண்டக்கோழி– 2 படத்தில் நடிக்க உள்ளார்.
 
இந்நிலையில் விரைவில் அஜித்துடன் ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என்ற தனது ஆசையை கீர்த்தி சுரேஷ் வெளிபடுத்தியுள்ளார்.
அடுத்த கட்டுரையில்