அனுஷ்காவின் டெக்னிக்கை பின்பற்றும் கீர்த்தி சுரேஷ்

Webdunia
திங்கள், 11 டிசம்பர் 2017 (13:56 IST)
நடிகை அனுஷ்கா இஞ்சி இடுப்பழகி படத்துக்குப் பிறகு பாகுபலி படத்தில் உடல் எடையை குறைக்க முடியாமல் சிரமப்பட்டார். பாகுபலி படத்தில் அனுஷ்காவை ஒல்லியாக காட்டியது எப்படி என்று அனைவருக்கும் தெரியும்.
பாகுபலி படத்தில் கிராஃபிக்ஸ் மூலம் அவரை உடல் எடை மெலிந்தது போல காட்டினார்கள். இந்நிலையில் தற்போது நடிகை  கீர்த்தி சுரேஷ் நடிக்கும் நடிகையர் திலகம் சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு படமான மகாநதியில் அவரை உடல் எடை கூட்ட  சொன்னார்கள். ஆனால் கீர்த்தி இதற்கு நோ சொல்லிவிட்டாராம். வேறு வழியில்லாமல் தான் இப்படி ஒரு முடிவாம். இதனால்  இப்படத்தில் அவரை கிராஃபிக்ஸ் மூலம் சற்று உடல் எடை கூட்டியது போல காண்பிக்கிறார்களாம். ஏற்கனவே இதில்  சமந்தாவும் நடித்து வரும் நிலையில் அனுஷ்காவும், பிரகாஷ் ராஜும் நடிக்கிறார்கிறார்களாம்.
 
மேலும் மகாநதி படத்தை மார்ச் 29-ல் ரிலீஸ் செய்ய முடிவு செய்துள்ளதாக அதிகார பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்