கவின் நடித்த ‘டாடா’ ரிலீஸ் தேதி அறிவிப்பு

Webdunia
திங்கள், 23 ஜனவரி 2023 (18:10 IST)
கவின் நடித்த ‘டாடா’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விரைவில் ரிலீஸ் ஆகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அதுமட்டுமின்றி இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி இணையத்தில் வைரலானது. 
 
ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் இந்த படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை பெற்று இருக்கும் நிலையில் பிப்ரவரி 10ஆம் தேதி இந்த படம் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது 
 
இதனை அடுத்து இந்த படத்தின் புரமோஷன் பணிகள் இன்னும் ஒரு சில நாட்களை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கவின் ஜோடியாக அபர்ணாதாஸ் நடித்துள்ள இந்த திரைப்படத்தில் விடிவி கணேஷ் கே பாக்யராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்/ இந்த படம் வெற்றி பெறுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்