ரஜினியை சுற்றி இருப்பவர்கள் ஏத்தி விடுகிறார்கள் - கஸ்தூரி அதிரடி

Webdunia
செவ்வாய், 23 மே 2017 (18:13 IST)
நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது பற்றி நடிகை கஸ்தூரி பல்வேறு அதிரடியான கருத்துகளை தெரிவித்து வருகிறார்.


 

 
சமீபத்தில் ரசிகர்களை சந்தித்த ரஜினி, தேவைப்பட்டால் அரசியலுக்கு வருவேன் எனப் பேசியது அவரது ரசிகர்களுக்கிடையே பரபரப்பை ஏற்படுத்தியது. ஏறக்குறைய அவர் அரசியலுக்கு வருவது உறுதி என்பது போன்ற சூழல் ஏற்பட்டுள்ளது.
 
அவரின் அரசியல் வருகை ஆதரித்தும், எதிர்த்தும் பல அரசியல் தலைவர்கள் மற்றும் நடிகர், நடிகைகள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதில் நடிகை  கஸ்தூரி தனது ட்விட்டர் பக்கத்தில் “நல்ல அரசியல் தலைவர் எதிர்ப்பாராத சூழ்நிலையிலும் உடனே முடிவெடுக்கும் திறம்வேண்டும். வருவேனா மாட்டேனா என்று வருடக்கணக்கில் யோசிப்பவர் ரஜினி. போர் போர் என்று ஒரே அக்கப்போராக உள்ளது” என்று பதிவிட்டார். இதனால் கொதிப்படைந்த ரஜினி ரசிகர்கள், டிவிட்டரில் அவருக்கு பதிலடி கொடுத்து வருகின்றனர். 
 
இந்நிலையில், சமீபத்தில் ஒரு பிரபல வார இதழான விகடனுக்கு கஸ்தூரி அளித்துளள பேட்டியில்  “அரசியலுக்கு வருவதாக தற்போது கூட அவர் உறுதியாக முடிவெடுத்துள்ளார் என நான் நம்பவில்லை. 20 வருடமாக இதையேதான் சொல்லிக்கொண்டிருக்கிறார். யாருக்கும் ஆதரவில்லை என சொல்கிறாரே தவிர, மக்களுக்காகவும், அரசியல் சார்ந்த நடவடிக்கைகளிலும் அவர் ஈடுபட்டதாகவே தெரியவில்லை. அதேபோல், அவர் தற்போது அரசியலுக்கு வருவதற்கு அழுத்தமான காரணம் இருப்பதாகவும் தெரியவில்லை. அவரை சுற்றி இருப்பவர்கள் ஏற்றி விடுவதால், அவர் இந்த முடிவை எடுத்தாரா தெரியவில்லை. அவர் யோசித்து எதையும் செய்ய வேண்டும்” என கூறியுள்ளார்.
அடுத்த கட்டுரையில்