வெங்கட் பிரபுவால் கசடதபற படத்துக்கு வந்த சிக்கல்!

Webdunia
வெள்ளி, 27 ஆகஸ்ட் 2021 (15:40 IST)
சிம்புதேவன் இயக்கத்தில் கசடதபற ஆந்தாலஜி திரைப்படம் வெங்கட்பிரபு தயாரிப்பில் உருவானது.

சிம்பு தேவன் இயக்கத்தில் ஆறு குறும்படங்களின் தொகுப்பாய் உருவாகியுள்ளது கசடதபற. ஆறு குறும்படங்களையும் சிம்பு தேவனே எழுதி இயக்கியுள்ள நிலையில் வெங்கட் பிரபு தயாரித்துள்ளார். ஆறு குறும்படங்களுக்கும் சாம் சி எஸ், ப்ரேம்ஜி அமரன், சந்தோஷ் நாராயணன், யுவன் சங்கர் ராஜா, ஷான் ரோல்டன், ஜிப்ரான் ஆகியோர் தனித்தனியாக இசையமைத்துள்ளனர்.

இந்த ஆறு குறும்படங்களிலும் ஹரிஷ் கல்யாண், சுந்தீப் கிஷன், ப்ரியா பவானி சங்கர், ப்ரேம்ஜி, ரெஜினா கஸாண்ட்ரா, அரவிந்த ஆகாஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தின் ட்ரெய்லர் நேற்று வெளியான நிலையில் இந்த படம் சோனி லைவ் ஓடிடியில் நேற்று நள்ளிரவு வெளியாக இருந்தது. ஆனால் படத்தின் தயாரிப்பாளர் ஏசிஎஸ் என்ற அவுட்டோர் யுனிட்டுக்காக வைத்திருந்த கடன்பாக்கிக்காக படத்தை ஸ்ட்ரீம் செய்வது கடைசி கட்டத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. அதன் பின்னர் தயாரிப்பாளர் ரவீந்தரன் கடன் சுமையை ஏற்றுக்கொண்டதில் பிரச்சனை முடிவுக்கு வந்த பின்னர்தான் ஸ்ட்ரீம் செய்யப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்