கருணாநிதி உடல்நலக்குறைவு; காவேரி மருத்துவமனைக்கு சென்ற அர்ஜுன், வடிவேலு

Webdunia
செவ்வாய், 7 ஆகஸ்ட் 2018 (15:26 IST)
நடிகர்கள் அர்ஜுன் மற்றும் வடிவேலு ஆகியோர் காவேரி மருத்துவமனைக்கு சென்று கருணாநிதி உடல்நிலை குறித்து விசாரித்துள்ளனர். திமுக தலைவர் கருணாநிதி உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார் திமுக தலைவர் கருணாநிதி. அவரை காண, அரசியல் தலைவர்கள்,  பிரபலங்கள், திரையுலக நட்சத்திரங்கள் மருத்துவமனைக்கு தொடர்ந்து வந்தவண்ணம் உள்ளனர். ஏற்கனவே நடிகர் ரஜினிகாந்த், சூர்யா, விஜய், அஜித் ஆகியோர்  நேரில் மருத்துவமனை சென்று நலம் விசாரித்தனர்.
 
இந்நிலையில் நேற்று காவேரி மருத்துவமனை வெளியிட்ட அறிக்கை தொண்டர்களிடையே பதட்டத்தை ஏற்படுத்தியது. உயர்தர சிகிச்சை அளிக்கப்படுகிறது.  ஆனால் வயது மூப்பின் காரணமாக அவருடைய உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அடுத்த 24 மணி நேரத்திற்குப் பிறகே கூறமுடியும் எனத் தெரிவிக்கப்பட்டது. அதனால் தொண்டர்கள் மருத்துவமனை வளாகத்தில் குவிந்துள்ளனர். பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் திரைப்பிரபலங்கள்  நேரில் வந்து நலம் விசாரித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர்கள் அர்ஜுன் மற்றும் வடிவேலு ஆகியோர் இன்று காவேரி மருத்துவமனைக்கு சென்று,  திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து கருணாநிதியின் உடல்நலம் குறித்து கேட்டறிந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்