முதலில் அப்புகுட்டி… இப்போ கருணாகரன்…

Webdunia
சனி, 29 ஜூலை 2017 (17:05 IST)
‘அஜித் தன்னுடைய தோற்றத்தையே மாற்றிவிட்டார்’ எனத் தெரிவித்துள்ளார் காமெடி நடிகர் கருணாகரன்.
 


 

‘வீரம்’, ‘வேதாளம்’ என இரண்டு படங்களில் தன்னுடன் நடித்த அப்புகுட்டியை அழகாக மாற்றி, போட்டோஷூட்டெல்லாம் செய்தார் அஜித். அந்த நாட்களில், வானமே தனக்கு கீழே தான் என்பதுபோல் இருந்தது அப்புகுட்டியின் நடவடிக்கை. அதன்பின்னர், தற்போது அவர் எங்கிருக்கிறார் என்பதே தெரியவில்லை. இந்நிலையில், ‘விவேகம்’ படத்தில் அஜித்தின் நண்பனாக நடித்திருக்கிறார் காமெடி நடிகர் கருணாகரன்.

கொஞ்சம் காமெடியும், நிறைய சீரியஸும் கலந்த கேரக்டரில் நடித்துள்ள கருணாகரனை, அஜித்தும், சிவாவும் சேர்ந்து அவரின் தோற்றத்தையே மாற்றிவிட்டார்களாம். “அந்த தோற்றத்தைப் பார்க்க எனக்கே பிரம்மிப்பாக இருந்தது” என்கிறார் கருணாகரன். பல்கேரியாவில் நடைபெறும் காட்சிகளில், அஜித்துடன் முழுக்க முழுக்க கருணாகரன் இருப்பாராம். விரைவில் அஜித்தின் கேமராவில் கருணாகரனும் க்ளிக் ஆவார் என நம்புவோமாக! என்ன… அதிலும் கருணாகரனின் போட்டோவைவிட, அஜித்தின் போட்டோ தான் அதிகமாக இருக்கும்.
அடுத்த கட்டுரையில்