ஒரே நாளில் இரண்டு பிரபல நடிகைகளுக்கு கொரோனா: அதிர்ச்சியில் திரையுலகம்!

Webdunia
திங்கள், 13 டிசம்பர் 2021 (17:38 IST)
ஒரே நாளில் இரண்டு பிரபல நடிகைகளுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ள நிலையில் திரையுலகம் அதிர்ச்சி அடைந்துள்ளது 
 
பிரபல பாலிவுட் நடிகை கரீனா கபூர் மற்றும் அம்ரிதா அரோரா ஆகிய இருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் இதனையடுத்து இருவரும் தனிமைப் படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன
 
மும்பை மாநகராட்சி ஏற்கனவே அறிவித்திருந்தியிருந்தும் கொரோனா விதிமுறைகளை மீறி கரீனா கபூர் மற்றும் அம்ரிதா ஆகிய இருவரும் பல்வேறு கேளிக்கை நிகழ்ச்சிகளில் பங்கேற்றதாகவும் இதன் காரணமாகத்தான் அவர்களுக்கு கொரோனா பரவி உள்ளதாகவும் கூறப்படுகிறது
 
இந்த நிலையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் கரீனா கபூர் மற்றும் அம்ரிதா அரோரா விரைவில் குணமாக ரசிகர்கள் சமூக வலைதளங்கள் மூலம் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்