கரகாட்டம் ஆடும் விக்ரம் பிரபு, நிக்கி கல்ரானி

Webdunia
வியாழன், 21 செப்டம்பர் 2017 (10:31 IST)
படத்தில் இடம்பெற்றுள்ள பாடலுக்காக விக்ரம் பிரபு, நிக்கி கல்ரானி இருவரும் கரகாட்டம் ஆடுகின்றனர் என்கிறார்கள்.

 
 
அறிமுக இயக்குநரான எஸ்.எஸ்.சூர்யா இயக்கியுள்ள படம் ‘பக்கா’. இதில், விக்ரம் பிரபு, நிக்கி கல்ரானி, சூரி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சத்யா இசை அமைத்துள்ளார். கிராமத்துப் பின்னணியைக் கொண்ட கதை என்பதால், படம் முழுவதுமே நாட்டுப்புற இசையாக இருக்கும்.
 
இந்தப் படத்தில், கோயில் திருவிழாவுக்காக கரகாட்டப் பாடல் ஒன்றும் தயாராகியுள்ளது. இதற்காக கிராமத்துக்குச் சென்று, ஒரிஜினல் கரகாட்டக்காரர்களின் இசையைக் கவனித்து, அதுபோலவே இசையமைத்திருக்கிறாராம் சத்யா. இந்தப் பாடலுக்கு விக்ரம் பிரபு, நிக்கி கல்ரானி இருவரும் நடனமாடலாம் என்கிறார்கள்.
அடுத்த கட்டுரையில்