விக்ரம் பிரபு தான் தயாரித்து நடிக்கும் படத்துக்கு, டைமிங்காக நெருப்புடா என பெயர் வைத்தார். பூஜை ஏற்கனவே முடிந்தாலும் நேற்றுதான் இதன் படப்பிடிப்பு தொடங்கியது.
விக்ரம் பிரபுவின் பர்ஸ்ட் ஆர்டிஸ்ட் தயாரிக்கும் இந்தப் படத்தை சோக் குமார் என்பவர் இயக்குகிறார். இதன் படப்பிடிப்பு நேற்று சென்னை கண்ணகி நகரில் தொடங்கியது.
இந்தப் படத்தில் நிக்கி கல்ராணி நாயகியாக நடிக்கிறார். தனது முதல் தயாரிப்பு என்பதால் படம் விஷயத்திலும், பட்ஜெட் விவகாரத்திலும் கறாராக இருக்கிறாராம் விக்ரம் பிரபு.