ரியல் ‘தலைவி’க்கு அஞ்சலி செலுத்திய ரீல் ‘தலைவி’

Webdunia
வியாழன், 5 டிசம்பர் 2019 (16:54 IST)
மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் மூன்றாவது ஆண்டு நினைவு தினம் இன்று தமிழகம் முழுவதும் அனுசரிக்கப்பட்டு வருவது தெரிந்ததே. இன்று அவருடைய பெயரைக் கொண்ட இரண்டு ஹேஷ்டேக்குகள் அகில இந்திய அளவில் டிரெண்ட் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது
 
மேலும் இன்று காலை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் ஜெயலலிதாவின் சமாதிக்குச் சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார் 
 
இந்த நிலையில் ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு திரைப்படமான ‘தலைவி’ என்ற படத்தில் ஜெயலலிதா கேரக்டரில் நடித்து வரும் நடிகை கங்கனா ரனாவத் இன்று ஜெயலலிதாவின் புகைப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் அஞ்சலி செலுத்தினார். இதுகுறித்த புகைப்படம் ஒன்றை பாலிவுட் பிரமுகர் ஒருவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த டுவீட் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
ஜெயலலிதா கேரக்டரில் கங்கனா ரனாவத் பொருந்தவில்லை என்று நெட்டிசன்கள் கூறினாலும் ஜெயலலிதா கேரக்டராகவே அவர் மாறி அதற்காக சிறப்பு பயிற்சி எடுத்து நடித்து வருவதாகவும், ஃபர்ஸ்ட் லுக்கை வைத்து நெட்டிசன்கள் இவ்வாறு விமர்சனம் செய்யக்கூடாது என்றும், படத்தில் ஜெயலலிதாவை உயிர்த்து எழுந்து வந்த மாதிரி கங்கனா ரணாவத் நடித்து இருப்பதை ரசிகர்கள்  உணர்வார்கள் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர் 
 
மேலும் தற்போது தலைவி படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தில் இருப்பதாகவும் இந்த படம் வரும் ஜூன் மாதம் 26ஆம் தேதி தமிழ் தெலுங்கு ஹிந்தி என மூன்று மொழிகளில் வெளியாகும் என்றும் படக்குழுவினர் தெரிவித்தனர்

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்