அரசியலுக்கு வரக்கூடாது - ரஜினி பற்றி கமல்ஹாசன் கருத்து

Webdunia
வெள்ளி, 26 மே 2017 (14:10 IST)
தற்போதைய சூழலில் யாரும் அரசியலுக்கு வரக்கூடாது என நடிகர் கமல்ஹாசன் கருத்து தெரிவித்துள்ளார்.


 

 
கடந்த 15ம் தேதி முதல் 19ம் தேதி, சென்னையில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் ரஜினிகாந்த் தன்னுடைய ரசிகர்களை சந்திக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சிகளில் தற்காலிக அரசியல் பற்றியெல்லாம் பரபரப்பான கருத்துகளை தெரிவித்தார். தமிழகத்தில் நல்ல தலைவர்கள் இல்லை, சிஷ்டம் இல்லை. போர் வரும் போது நாம் பார்த்துக்கொள்வோம் எனக்கூறி ரசிகர்களை ஆர்ப்பரிக்க வைத்தார். 
 
அவரின் பேச்சு விரைவில் அவர் அரசியலுக்கு வருவார் என்பதையே காட்டியது. அவர் அரசியலுக்கு வருவதை சில தலைவர்கள் ஆதரித்தும், சிலர் எதிர்த்தும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
 
இந்நிலையில், இதுபற்றி சென்னையில் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த கமல்ஹாசன் “அரசியல் என்பது சேவை தொடர்புடையது. தமிழ் உணர்வுள்ள எவரும் தமிழகத்தை ஆளலாம். தற்போதைய சூழலில் யாரும் அரசியலுக்கு வரக்கூடாது.  சிஸ்டம் சரியில்லை என ரஜினி கூறியிருப்பது தவறுமில்லை, வித்தியாசமான கருத்தும் இல்லை” என அவர் தெரிவித்தார்.
அடுத்த கட்டுரையில்