தீபிகாவின் தலை காப்பாற்றப்பட வேண்டும்: கமல்ஹாசன்

Webdunia
திங்கள், 20 நவம்பர் 2017 (23:50 IST)
'பத்மாவதி' படத்தில் நடித்த நடிகை தீபிகாவின் தலைக்கு ரூ.5 கோடி பரிசளிக்க போவதாக பாஜக பிரமுகர்  ஒருவர் அறிவித்த சர்ச்சைக்குரிய அறிவிப்பால் நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகள் ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்சனைக்கு பெரிய நட்சத்திரங்கள் குரல் கொடுக்காமல் இருப்பதும் ஆச்சரியத்தை அளிக்கின்றது.







இந்த நிலையில் உலக நாயகன் கமல்ஹாசன் இன்று இந்த பிரச்சனையில் களத்தில் குதித்துள்ளார். தனது டுவிட்டரில் இதுகுறித்து அவர் கூறியதாவது: பத்மாவதி’ பிரச்சனையில் நடிகை தீபிகாவை பாதுகாக்க வேண்டும்.  இதேபோல் என்னுடைய படங்களுக்கும் பிரச்சனைகள் எழுந்தன. உடலுக்கு தலை முக்கியம். இங்கு தீபிகாவின் தலை காப்பாற்றப்பட வேண்டும். அதை விட அவருக்கான சுதந்திரத்தை காக்க வேண்டும்.  இது சிந்திக்க வேண்டிய நேரம். நிறைய சொல்லியாகி விட்டது. கேட்டுக் கொள் பாரத மாதாவே! என்று குறிப்பிட்டுள்ளார்.

கமல்ஹாசனின் இந்த கருத்துக்கு தீபிகாவின் ரசிகர்கள் நன்றி தெரிவித்து வருகின்றனர். அதே நேரத்தில் கமல்ஹாசனின் இந்த கருத்துக்கு ஒருசில மதவாதிகள் எதிர்ப்பு தெரிவித்தும் வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்