மம்தா பானர்ஜி சந்திப்பில் நடந்தது என்ன? கொல்கத்தாவில் கமல் பேட்டி

Webdunia
வெள்ளி, 10 நவம்பர் 2017 (18:05 IST)
கொல்கத்தாவில் நடைபெறும் 23வது சர்வதேச திரைப்பட விழாவில் கலந்து கொள்ள இன்று காலை சென்னையில் இருந்து கிளம்பிய கமல், மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியை சந்திக்கும் திட்டம் இருப்பதாக உள்ள செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் சற்றுமுன்னர் மம்தா பானர்ஜி -கமல் சந்திப்பு நடந்தது.



 
 
இந்த சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கமல், 'நான் கொல்கத்தாவுக்கு அரசியல் பயணமாக வரவில்லை. சினிமா விழாவில் கலந்து கொள்ளவே வந்தேன். மேலும் உங்கள் மாநில முதல்வரின் ரசிகன் நான். அந்த வகையில் அவரை மரியாதை நிமித்தம் சந்திதேன். இந்த சந்திப்பில் அரசியல் எதுவும் இல்லை' என்று கூறினார்.
 
கமல்ஹாசன் ஏற்கனவே டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், கேரள முதல்வர் பினராயி விஜயன் ஆகியோர்களை சந்தித்திருக்கும் நிலையில் தற்போது மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியையும் சந்தித்துள்ளார். தேசிய தலைவர்களை கமல் தொடர்ந்து சந்தித்து வருவதால் அவரது அரசியல் தேசிய அரசியலாகவும் இருக்கும் என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து கூறி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்