வெந்து தணிந்தது காடு ஆடியோ விழா: ஹெலிகாப்டரில் வந்திறங்கிய கமல்-சிம்பு!

Webdunia
வெள்ளி, 2 செப்டம்பர் 2022 (19:00 IST)
சிம்பு நடித்த வெந்து தணிந்தது காடு என்ற திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா இன்று நடைபெற்று வரும் நிலையில் இந்த விழாவுக்கு ஹெலிகாப்டரில் சிம்பு மற்றும் கமல்ஹாசன் வருகை தந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் வெந்து தணிந்தது காடு. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து வரும் 15ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
 
இந்த நிலையில் இந்த படத்தின் ஆடியோ மற்றும் டிரெய்லர் விழா இன்று பிரமாண்டமாக நடைபெற இருக்கும் நிலையில் சிறப்பு விருந்தினராக கமல்ஹாசன் விழாவில் கலந்துகொண்டார்
 
 அவரை அழைத்து வர ஹெலிகாப்டர் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விழாவில் உதயநிதி ஸ்டாலின் உள்பட பலர் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ள உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்