லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய்சேதுபதி மற்றும் பகத் பாசில் ஆகியோர் நடித்துள்ள படம் விக்ரம், இந்த படத்தில் சூர்யா ஒரு முக்கிய தோற்றத்தில் சில நிமிடங்கள் நடித்துள்ளார். அனிருத் இசையமைத்துள்ள விக்ரம் திரைப்படம் ஜூன் 3 ஆம் தேதி இந்த படம் வெளியான நிலையில் ரசிகர்களிடையே நல்ல பாசிட்டிவான விமர்சனங்கள் கிடைத்து வருகிறது. இதுவரை தமிழ் படங்கள் படைத்த பல வசூல் சாதனைகளை இந்த திரைப்படம் முறியடித்துள்ளது. கிட்டத்தட்ட திரையரங்குகள் மூலமாக 450 கோடிக்கும் மேல் வசூல் செய்யும் என தகவல்கள் வெளியாகின்றன.
சாதனை மேல் சாதனை படைத்து வரும் விக்ரம் திரைப்படம் 2022 ஆமமஅண்டு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அதிகம் விரும்பப்பட இந்தியத் திரைப்படங்கள் மற்றும் வெப் தொடர்களின் தரவரிசை பட்டியலை வெளியிடும் ஐஎம்டிபி அமைப்பு தற்போது ஒரு பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில், கமலின் விக்ரம் படம் 8-6 ரேட்டிங் பெற்று முதலிடத்தைப் பிடித்துள்ளளது.