பரபரப்பான படப்பிடிப்பில் இந்தியன் 2 – வெளியான புகைப்படங்கள் !

Webdunia
புதன், 23 அக்டோபர் 2019 (17:50 IST)
இந்தியன் 2 படத்தில் நடித்துவரும் கமலின் கெட் அப் சம்மந்தமான புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

கமல் ஷங்கர் கூட்டணியில் உருவாக இருக்கும் இந்தியன் 2 படப்பிடிப்பு சில பல காரணங்களால் நிறுத்தப்பட்டு இப்போது மீண்டும் தொடங்கியுள்ளது. இதையடுத்து விறுவிறுப்பாக நடந்து வரும் படப்பிடிப்புக்காக அடுத்த கட்டமாக போபாலுக்கு செல்ல இருக்கிறது படக்குழு.

இந்த சண்டைக்காட்சியில் மட்டும் மொத்தமாக 2000 துணைக்கலைஞர்கள் பங்கேற்க உள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும் இந்த ஒரே ஒரு சண்டைக்காட்சிக்காக 40 கோடி ரூபாய் செலவழிக்கப்பட உள்ளதாகவும் சொல்லப்பட்டது. இந்த காட்சியை ஸ்டண்ட் இயக்குனர் பீட்டர் ஹெய்ன் வடிவமைத்து வருகிறார்.

இந்நிலையில் போபாலில் நடைபெற்று வரும் படப்பிடிப்பில் இருந்து சில புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. இதில் முதன் முதலாக இந்தியன் 2 வில் கமலின் வயதான் கெட் அப் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படங்களை படக்குழுவினருக்குத் தெரியாமல் யாரோ கசியவிட்டிருப்பதாக தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்