மோசமான விமர்சனங்களாலும், கேலிகளாலும் படத்தில் இருந்து 12 நிமிட நேரத்தைக் குறைத்தனர். ஆனால் அப்போதும் அந்த படம் ரசிகர்களை தியேட்டருக்குள் ஈர்க்கவில்லை. இந்நிலையில் இந்தியன் 3 மீது ரசிகர்களுக்கு இருந்த எதிர்பார்ப்பு அப்படியே படுத்துவிட்டது. இதனால் திட்டமிட்டதற்கு முன்பே இந்த படம் ஓடிடியில் வெளியாகலாம் என சொல்லப்படுகிறது.
இந்நிலையில் கமல்ரசிகர்கள் இந்தியன் 2 திரைப்படம் 400 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக போஸ்டர் அடித்து ஒட்டியுள்ளனர். மேலும் அந்த போஸ்டரில் “வெறுப்பைப் பரப்பினாலும் நெருப்பிடம் பலிக்காது. இந்தியன் 2 திரைப்படம் 20நாட்களைக் கடந்து 400 கோடி ரூபாய் வசூல். நெட்பிளிக்ஸில் 220 கோடி, உலகமெங்கும் 180 கோடி” எனத் தெரிவித்துள்ளனர்.