பிரபல தெலுங்கு நடிகர் விஷ்ணு மஞ்சு நடிப்பில் உருவாகியுள்ள "கண்ணப்பா" திரைப்படம் ஏப்ரல் 25ஆம் தேதி திரையரங்குகளுக்கு வர இருக்கிறது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி, ஆங்கிலம், கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் வெளியாகும் இந்தப் படத்தின் விளம்பர பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இந்த படத்தில் சரத்குமார், ப்ரீத்தி முகுந்தன், ராகுல் ராமகிருஷ்ணா, பிரம்மானந்தம், மோகன் பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அதோடு, மோகன்லால், பிரபாஸ், அக்ஷய் குமார், காஜல் அகர்வால் போன்ற முன்னணி நட்சத்திரங்கள் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளனர்.
இந்த நிலையில் இந்த படத்தில் முக்கியமான பாத்திரத்தில் நடித்த ரகுபாபு, ஒரு பேட்டியில், "எங்கள் படத்தைக் ட்ரோல் செய்தால், சிவனின் கோபத்துக்கு ஆளாகிவிடுவீர்கள். அவர் யாரையும் விட்டுவைக்கமாட்டார். எச்சரிக்கை!" என்று கூறியிருக்கிறார். அவரது இந்த கருத்து சமூக ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.