அமரன் படத்துக்காக முகுந்த் வரதராஜனின் குடும்பத்துக்கு கமல்ஹாசன் கொடுத்த ராயல்டி!

vinoth

செவ்வாய், 30 ஜூலை 2024 (08:35 IST)
சிவகார்த்திகேயன் நடிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் கமல்ஹாசனனின் ராஜ்கமல் இண்டர்நேஷனல் மற்றும் சோனி பிக்சர்ஸ் நிறுவனத் தயாரிப்பில் உருவாகி வரும் அமரன் திரைப்படத்தின் டீசர் வெளியாகி வரவேற்பையும் விமர்சனங்களையும் பெற்றது. இந்த திரைப்படம் சென்னையைச் சேர்ந்த மறைந்த கேப்டன் முகுந்த் வரதராஜனின் கதையைத் தழுவி உருவாக்கப்பட்டுள்ளது.

அமரன் திரைப்படத்தின் படப்பிடிப்பு காஷ்மீர் ஏராளமான காட்சிகள் படமாக்கப்பட்டது. அதை பொறுத்துவது போன்ற நிலவியலில் இப்போது இறுதிகட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு வந்த நிலையில் சமீபத்தில் படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைந்தது. இதையடுத்து போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடந்து வரும் நிலையில் படம் அக்டோபர் 31 ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.

இந்நிலையில் இந்த படத்தின் கதைக்காக முகுந்த் வரதராஜனின் குடும்பத்தினரிடம் ஒரு பெரிய தொகையைக் கமல்ஹாசன் ராயல்டியாகக் கொடுத்துள்ளாராம்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்