நயன்தாரா-அனிருத் பாடல் யூடியூபில் இருந்து நீக்கம்! ஏன் தெரியுமா?

Webdunia
புதன், 19 டிசம்பர் 2018 (09:14 IST)
நடிகை நயன்தாரா நடிப்பில் இயக்குனர் நெல்சன் இயக்கியிருந்த 'கோலமாவு கோகிலா' திரைப்படம் கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியாகி சூப்பர்ஹிட் ஆனது என்பது தெரிந்ததே. இந்த படத்தில் இடம்பெற்றிருந்த 'கல்யாண வயசு' என்ற பாடல் யூடியூபில் சாதனை பெற்றது. அனிருத் கம்போஸ் செய்து பாடிய இந்த பாடலை சிவகார்த்திகேயன் எழுத இந்த பாடலில் நயன்தாராவும் யோகிபாபுவும் நடித்திருந்தனர்.

இந்த பாடல் மில்லியன் கணக்கான பார்வையாளர்களை பெற்றிருந்த நிலையில் திடீரென யூடியூபில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. இதற்கு காரணமாக வேறொரு மொழி பாடலில் இருந்து இந்த பாடல் காப்பி அடிக்கப்பட்டுள்ளதாக யூடியூப் விளக்கம் அளித்துள்ளது.

ஆனால் இதுகுறித்து படக்குழுவினர் விளக்கமளித்தபோது 'அனிருத் அந்த டியூனை ஒரு குறிப்பிட்ட காலத்திற்குக் ரைட்ஸ் வாங்கியிருந்ததாகவும், அந்த காலக்கெடு முடிவடைந்துள்ளதால் யூடியூபில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். இருப்பினும் இதனை நம்பாத ரசிகர்கள் அனிருத்தை காப்பி பேஸ்ட் இசையமைப்பாளர் என்று கலாய்த்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்