களத்தில் சந்திப்போம் படத்துக்கு 400 திரையர்ங்குகள் ஒதுக்கல் – ஆச்சர்யத்தில் கோலிவுட்!

Webdunia
வியாழன், 4 பிப்ரவரி 2021 (17:26 IST)
ஜீவா மற்றும் அருள்நிதி ஆகியோர் நடித்துள்ள களத்தில் சந்திப்போம் படம் 400 திரைகளில் வெளியாக உள்ளதாம்.

இதனால் ஜனவரி 28 ஆம் தேதி ரிலிஸ் ஆகும் என சொல்லப்பட்ட ஜீவா மற்றும் அருள்நிதி நடித்துள்ள களத்தில் சந்திப்போம் திரைப்படம் மாஸ்டர் படத்தின் வெளியீட்டால் பிப்ரவரி 5 (நாளை) ரிலீஸாக உள்ளது. இது தயாரிப்பாளர் ஆர் பி சௌத்ரியின் 90 ஆவது தயாரிப்பாகும்.

நீண்டநாட்களாக இந்த படம் ரிலீஸாகாமல் இருந்த நிலையில் இப்போது ஒரு வழியாக ரிலீஸாகிறது. அது கூட ஒரு வகையில் நல்லதாக அமைந்துள்ளது. மாஸ்டர் படத்தை நாளையில் இருந்து பெரும்பாலான திரையரங்குகளில் தூக்க உள்ள நிலையில் களத்தில் சந்திப்போம் படத்துக்கு 400 திரைகள் ஒதுக்கப்பட்டுள்ளதாம். இது வழக்கமாக ஜீவா மற்றும் அருள்நிதி ஆகியோரின் படத்துக்கு ஒதுக்கப்படும் திரைகளின் எண்ணிக்கையை விட இருமடங்காகும்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்