ரூ.5 கோடி சம்பளத்தை தூக்கி எறிந்த காஜல்: காரணம் என்ன??

திங்கள், 4 செப்டம்பர் 2017 (14:31 IST)
கோலிவுட் மற்றும் டோலிவுட்டில் முன்னணி நடிகைகளுள் ஒருவராக இருப்பவர் காஜல் அகர்வால். சமீபத்தில் அவர் நடித்த தமிழ் மற்றும் தெலுங்கு படங்கள் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.


 
 
காஜல் அடுத்து குயின் என்னும் ஹிந்தி ரீமேக் படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தில் நடிக்க காஜல் ஒப்பந்தம் செய்யப்பட்ட பிறகு அவருக்கு அடுத்தடுத்து இரண்டு படங்கள் வந்தது.
 
இவ்விரண்டு படத்திலும் ஒப்பந்தமாகி இருந்தால் அவருக்கு ரூ.5 கோடி சம்பளம் கிடைத்திருக்கும். ஆனால், காஜல் இந்த இரண்டு படங்களையும் நிராகரித்துவிட்டார்.
 
அந்த இரண்டு படங்களும் பெண்களை மையப்படுத்திய கதை என்பதால் அதை காஜல் நிராகரித்துள்ளார். நயன்தாரா போன்ற நடிகைகள் ஹீரோயினுக்கு முக்கியதுவம் அளிக்கும் படத்தை தேடி பிடித்து நடித்து வரும் நிலையில், காஜலின் இந்த செயல் அனைவரையும் அச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்