கர்நாடக மாநிலத்தில் உள்ள மடிகேரி என்ற பகுதியைச் சேர்ந்த கிஷன் என்பவரிடம் ஹரிஷ் என்பவர் கூலித் தொழிலாளியாக வேலை செய்து வந்துள்ளார். சமீபத்தில் ஹரிஷ் வேலையை விட்டு நின்றுவிட்டார். வேலை விட்டு நிற்கும் முன்பு ஹரிஷ், கிஷனிடம் 4000 ரூபாய் கடன் வாங்கியுள்ளார்.
இந்நிலையில் கடந்த 29ஆம் தேதி கிஷன் தன்னிடம் வாங்கிய கடனை திருப்பிக் கேட்க, ஹரிஷ் பணம் இல்லாத காரணத்தினால் கொடுக்கவில்லை. இதில் ஆத்திரம் அடைந்த கிஷன், ஹரிஷை அடித்து அவரது பண்ணைக்கு இழுத்துச் சென்றார். பண்ணையில் நாய் கூண்டில் அடைத்து வைத்தார்.
கூண்டில் இருந்த நாய்கள் ஹரிஷை கடித்து காயப்படுத்தியுள்ளன. சிறிது நேரம் கழித்து ஹரிஷ், நாய் கூண்டிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். உடனே ஹரிஷ் மருத்துவமனைக்கு சென்று முதலுதவி சிகிச்சை பெற்றுள்ளார். இதையடுத்து காவல் நிலையம் சென்று புகார் கொடுத்துள்ளார். அதன் பேரில் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.