நீதிமன்ற தீர்ப்பு ; இதுவே அதிமுகவை இணைக்கும் : எம்.எல்.ஏ கீதா மணிவண்ணன் (வீடியோ)

வெள்ளி, 1 செப்டம்பர் 2017 (17:26 IST)
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, கடந்த 2014-ம் ஆண்டு சட்டசபையில் விதி எண் 110-ன் கீழ் கரூரில் அரசு மருத்துவக்கல்லூரி அமைக்கப்படும் என்று அறிவித்தார். 


 

 
இதற்காக ரூ.229½ கோடி நிதியும் ஒதுக்கினார். இதைத்தொடர்ந்து கரூர் அரசு தலைமை மருத்துவமனை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டது. இதைத்தொடர்ந்து கரூர் அரசு மருத்துவகல்லூரி மருத்துவ மனைக்கு புதிதாக முதல்வர் நியமனம் செய்யப்பட்டார். 
 
இதைத்தொடர்ந்து கரூர் அரசு மருத்துவ கல்லூரி அமைக்க, கரூரை அடுத்த வாங்கல் குப்புச்சிபாளையத்தில் இடம் தேர்வு செய்யப்பட்டது. ஆனால் அரசு மருத்துவமனை செல்லும் வழியில் கரூர் நகராட்சிக்கு சொந்தமான குப்பைக்கிடங்கு ஒன்று இருந்ததாகவும், அந்த இடத்தில் மருத்துவக்கல்லூரி கொண்டு வரும் திட்டம் கை விடப்பட வேண்டுமென்றும், கரூர் நகராட்சியில் தீர்மானம் கொண்டு வந்ததாகவும், அதற்கு பதில் இரண்டாவது இடமாக கரூர் நகராட்சிக்கு சொந்தமான இடத்தையே கரூர் அடுத்த சணப்பிரட்டி பகுதியில் தேர்வு செய்தது. 
 
இந்நிலையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உயிருடன் இருக்கும் போது ஆணை எண் 362ன் கீழ் கொண்டுவரப்பட்டது என்றும், மேலும் கரூர் நகராட்சியில் உள்ள சணப்பிரட்டியில் 16 ½ ஏக்கர் நிலம் தான் உள்ளது என்றும், ஒரு அரசு மருத்துவக் கல்லூரி நிர்ணயிக்க வேண்டுமென்றால் சுமார் 20 ஏக்கராவது நிலம் இருக்க வேண்டுமென்று காரணம் காட்டி மதுரை உயர்நீதிமன்றத்தில் வாங்கல் பகுதியில் தான் வரவேண்டுமென்றும், சணப்பிரட்டி பகுதியில் தான் வரவேண்டுமென்றும் மாறி, மாறி மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். 
 
இந்நிலையில் இந்த வழக்கு குறித்து தீர்ப்பு மதுரை உயர்நீதிமன்றத்தில் வெளியானது, அதில் கரூர் நகராட்சிக்கு சொந்தமான நிலத்திலேயே மருத்துவக்கல்லூரியை கட்ட வேண்டுமென்றும், அரசிற்கு உத்திரவு போட்டுள்ளது. 
 
இந்நிலையில் கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியில் தான் அந்த மருத்துவக்கல்லூரி வந்ததையடுத்து அந்த தொகுதியின் எம்.எல்.ஏ கீதா மணிவண்ணன் இந்த தீர்ப்பை வரவேற்பதாகவும், இந்த தீர்ப்பு வந்த நன்னாளில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா உயிருடன் இருப்பதாகவும், எதிர்கட்சிகள் எப்படியாவது இந்த அ.தி.மு.க அரசை கவிழ்க்க சதி செய்வதாகவும், இந்த தீர்ப்பு அதற்கு பதில் சொல்லும்  வகையில் அமைந்துள்ளதாகவும், இந்த தீர்ப்பை போலவே பிரிந்து போன அ.தி.மு.க எம்.எல்.ஏ க்கள் ஒன்றிணைந்து மீண்டும் தமிழகம் அ.தி.மு.க வின் கோட்டை என்பதை உணர்த்தும் சமயம் விரைவில் வரும் என்றும் எம்.எல்.ஏ கீதா மணிவண்ணன் கூறினார்.

சி.ஆனந்தகுமார் - கரூர் செய்தியாளர்
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்