முதல்முறையாக வருங்கால கணவருடன் நெருக்கமாக காஜல் அகர்வால்: வைரலாகும் புகைப்படம்!

திங்கள், 26 அக்டோபர் 2020 (17:30 IST)
முதல்முறையாக வருங்கால கணவருடன் நெருக்கமாக காஜல் அகர்வால்
பிரபல நடிகை காஜல் அகர்வாலுக்கும் மும்பை தொழிலதிபர் கௌதம் அவர்களுக்கு வரும் 30ஆம் தேதி திருமணம் நடைபெற உள்ளது என்பது தெரிந்ததே
 
காஜல் அகர்வாலின் மும்பை வீட்டில் மிகவும் எளிமையாக குறைந்த விருந்தினர்களுடன் இந்த திருமணம் நடைபெற உள்ளது என்பதும், பத்திரிக்கையாளர்கள் மற்றும் ரசிகர்கள் திரையுலகினருக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் சமீபத்தில் காஜல் அகர்வால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வருங்கால கணவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். தனது ரசிகர்களுக்கு தசரா வாழ்த்துக்கள் கூறிய இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
ஏற்கனவே மும்பையில் உள்ள ஒரு வீட்டின் புகைப்படத்தை வெளியிட்ட காஜல் அகர்வால் அந்த வீட்டில் தான் தானும் வருங்கால கணவர் கௌதமனும் திருமணத்திற்குப் பின்னர் வாழ இருப்பதாக காஜல்அகர்வால் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்