தொடர்ந்து 10 விஜய் படங்களை வேண்டாம் என்று சொன்னேன் – ஹாரிஸ் ஜெயராஜ் பகிர்ந்த தகவல்!

vinoth

திங்கள், 17 மார்ச் 2025 (07:26 IST)
தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளராக 2000 ஆம் ஆண்டு முதல் இருந்து வருபவர் ஹாரிஸ் ஜெயராஜ். இவர் கௌதம் மேனன், ஜீவா, கே வி ஆனந்த் மற்றும் ஷங்கர் ஆகிய இயக்குனர்களுடன் இணைந்து கொடுத்த ஹிட் பாடல்கள் எண்ணிலடங்காதவை. ஆனால் ஒரு கட்டத்தில் அவருக்கான வாய்ப்பு திடீரென குறைய ஆரம்பித்தது. இதே போல அவரது பாடல்கள் பெரும்பாலும் காப்பி அடிக்கப்பட்டவை என்ற குற்றச்சாட்டும், அவரின் சம்பளம் அதிகம் என்ற குற்றச்சாட்டும் தொடர்ந்து வைக்கப்பட்டு வந்தது.

இப்போது சினிமா கேரியரில் ஒரு சிறு பின்னடைவை அவர் சந்தித்துள்ளார். சமீபகாலமாக அவர் இசையில் அதிக படங்கள் வெளிவரவில்லை. வெளியான பிரதர் போன்ற படங்களும் வெற்றிகரமாக அமையவில்லை. அவர் இசையில் உருவான துருவ நட்சத்திரம் படமும் நீண்ட ஆண்டுகளாக ரிலீசாகாமல் உள்ளது.

இந்நிலையில் சமீபத்தில் அவர் அளித்த ஒரு நேர்காணலில் ஆச்சர்யமான ஒரு தகவலைப் பகிர்ந்துள்ளார். அதில் “ஒரு கட்டத்தில் நான் தொடர்ந்து 10 விஜய் படங்களை வேண்டாம் என்று சொன்னேன். 11 ஆவது படமாகதான் நண்பன் படத்துக்கு இசையமைத்தேன். ஏனென்றால் எனக்கு அதிக படங்களில் வேலை செய்வதை விட முழு ஈடுபாட்டுடன் குறைந்த படங்களில் வேலைப் பார்ப்பதே பிடிக்கும்.” எனக் கூறியுள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்